ஒரே கடல்

Kayyoppu

https://gaana.com/album/ore-kadal

‘ஒரே கடல்’ என்ற இந்த மலையாளப் படத்தில் உள்ள ஆறு பாடல்களும் சுபபந்துவராளி ராகத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் சுபபந்துவராளியின் ஒரு சாயையைக் காட்டுகிறது. இப்படத்தின் பின்னணி இசை முழுவதும் சுபபந்துவராளி தான். இப்படப் பாடல்கள் ஒரு இசை அற்புதம். சரியான மனநிலையில் இப்பாடல்களைக் கேட்க ஆரம்பித்தால், கேட்பதை நிறுத்தவே முடியாது.

ஔசேப்பச்சன் இப்பாடல்களை இசையமைத்திருக்கிறார். அவருக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. இப்பாடல்களை எழுதியவர் கிரிஷ் புத்தன்சேரி . ஷ்யாம பிரசாத் இப்படத்தின் இயக்குனர்.

சுவேதா மோகனுக்கும் ‘யமுன வெருதே’ வுக்காக விருது கிடைத்துள்ளது. எல்லாத் துறைகளிலும் இப்படத்துக்கு ஒரு விருதாவது கிடைத்துள்ளது. சுஜாதா மோகன், பாம்பே ஜெயஸ்ரீ, ஔசேப்பச்சன், வினீத் ஸ்ரீநிவாசன் , நவீன் நாயர், ஜி. வேணுகோபால் ஆகியோர் இப்பாடல்களைப் பாடியுள்ளனர்.

இந்த லிங்கில் இப்பாடல்களின் வரிகளைக் காணலாம்.

http://seethus.blogspot.com/2010/08/ore-kadal-songs-lyrics.html