பேராண்மகன்

மடியில் அமர்த்திக் கொள்கிறான்
கால் பொடியை நெற்றியில் சூடுகிறான்
தோளில் ஏற்றிக் கொள்கிறான்
சுற்றிச் சுற்றி வருகிறான்

பெருங்காதலன்

கொஞ்சிக் கொஞ்சி
முத்தம்
பெற்றுக் கொள்கிறான்

அது
அமுதம்
மிகப் 
புனிதம்

அதை
மார்பில்
அணிந்ததாலேயே
அவன்
பேராண்மகன்