தொலைபேசியில் ஒருவர் கொஞ்சலாக பேசிக்கொண்டு உணவு மேஜையில் மூவர் அரட்டை அடித்துக் கொண்டு வாசலில் இருவர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இரண்டு சிறார்கள் கைக்குழந்தையின் அம்மையிடம் ஒன்று மிதிவண்டியில் ஒன்று குதிரையில் யாவர்க்குமாய் சேர்த்து அரை ஆழாக்கு சோறு பொங்க ஆயத்தமானாள்