அரையிருள் அறையில்
புதிய ஆடைகளில்
உயர் ரக மது அருந்தி
மெல்லிசைக்கேற்ப
தோளையும்
இடுப்பையும்
அணைத்துக் கொண்டு
ஆடிக் கொண்டிருந்தனர்
சட்டென்று
மத்தியில் ஒரு
ஒளி வட்டம்
சொற்ப
ஆடையணிந்து
நீள நீள கை காலாட்டி
தாளத்தில் அசைந்து
ஆட ஆரம்பித்தாள்
மெல்ல மெல்ல
உச்சத்தை அடைந்ததும்
ஒளி வட்டம் அணைந்தது
மீண்டும் அரையிருள்
பின்
பலத்த கைதட்டல்
கண்ணாடி முன் அமர்ந்து
உதட்டுச் சாயத்தை அழித்து
பொய் இரப்பைகளை அகற்றி
நகங்களைக் கழட்டினாள்
ஆடைகளை அணிந்து கொண்டு
மீண்டும்
ஒரு முறை
பின்னவளின்
ஒளி வட்டத்தைப்
பார்த்து விட்டு
மெல்லத்
திரும்பினாள்
கண்ணீர் திரையிட்டது