அன்னம்

கண்களைச் சுற்றி
சுருக்கம்
வாயைச் சுற்றியும் தான்
தலை முழுதும் நரை
உடலும் வற்றல் தான்

கண் அருகே மச்சம்
எனக்கு அத்தனை நெருக்கம்

சுருங்கிப் போன கையால்
மெல்லப் போடுகிறாள் அன்னம்

என்னவள்..

மெல்லத் தொடுகிறேன்
கண்களைப் பார்க்கிறேன்

வியப்பு
வெட்கம்

'லூசு' 
மெல்லச் சிரித்துக் கொள்கிறாள்

பெருமூச்சுடன்
சோற்றுத் தட்டைப்
பார்க்கிறேன்

அவள் கை
இன்னமொரு முறை
அன்னமிடுகிறது