விதையென்றாவது

காலத்தை 
அவன்
மாயை என்றான்
சுழல் என்றான்
முடிவிலி என்றான்

அவன் பேசியது
அன்றாடங்களை
அல்ல..

கிடைக்கப் பெற்றவனின்
மனதில் ஊறி
வளர்ந்து
கிளைபரப்பப் போகும்
விதையின்
இரகசியங்களை

ஆயிரமாயிரம் தலைமுறைகளை
வாழவைக்கப் போகும்
கங்கையை
சிமிழுக்குள் அடக்கிய
பெருஞ் சித்தன் அவன்

மற்றொரு முறை
அவனுக்கு
வரலாற்றுணர்வு
இல்லையென்று
சொல்லாதீர்

காலாதீத்துடன்
பேசியவன்
என்
மூதாதை