
கருப்பை எனும் தெய்வம் வலியும் கண்ணீரும் குருதியும் அதன் பலி என்றார் வாரிசும் வாழ்வும் அதிகாரமும் அதன் வரம் என்றார் கண்ணோ வாயோ செவியோ மனமோ இன்றி இருத்தல் நலம் வலி கொஞ்சம் குறையும் என்றார் ஏதுமற்று நடமாடும் கருவறைகள் பொருள் என்ன உள்ளது சுயம் சுடர் கொள்ளட்டும் தெய்வமாய்