திசையை
மறைத்துக் கொண்டு
படுத்திருந்தது
அது..
அதன் கண்படும்
தூரத்தில்
இரண்டு சின்னப் பறவைகள்
அலகோடு அலகு பொருத்தி
கொஞ்சிக் கொண்டிருந்தன
ஒன்று பறந்து சுழன்று
மீண்டும் வந்து கொஞ்சியது
அதன் வரவை
மற்றொன்று
ஆவலோடு
எதிர் பார்த்திருந்தது..
பின்னர்
இது பறந்து சென்று
மீண்டும் வந்து கொஞ்சியது
அவைகளின் களியாட்டை
பார்த்துக்
கொண்டிருந்த
அது
மெல்லச் சிரித்துக் கொண்டது
சட்டென
அதற்கொரு
சந்தேகம்..
போன முறை
இங்கு இருந்தது
வேறொன்றோ?
அதனாலென்ன..
அதன் குறு நகை
இன்னும் கொஞ்சம்
பெரிதாகியது