
விழித்தெழுந்த பொழுது ஒன்றும் மாறியிருக்க வில்லை மனம் மட்டும் கொஞ்சம் மரத்திருந்தது மூச்சும் கேவலாய் வெளி வந்தது பின் நினைவுக்கு வந்தது இனி எதுவும் முன்பு போல் இல்லை என்னில் ஒரு பகுதியே இல்லாமலாகியிருந்தது மீண்டும் முகிழ்க்குமா முகிழ்த்தாலும் இது அதுவாகுமா மரணத்திலும் பிரிவின்றி ஆகுக