என்ன செய்வாய்..

வேண்டாம் என்றேன்

வேண்டுமா என்றாய்

எடுத்துக் கொண்டேன்

தட்டிப் பறித்தாய்

தள்ளிப் போனேன்

கிட்டே வந்தாய்

கட்டி அணைத்தேன்

எட்டி உதைத்தாய்

உன் விருப்பம் என்று

கைக் கட்டிக் கொண்டு விட்டேன்

இப்போது என்ன செய்வாய்?