
நிலையற்றிருந்தேன்
தவித்தேன்
இருக்கவோ கிடக்கவோ முடியவில்லை
பெரும் வலிக்குப் பின்
பிறந்தது..
எப்போது உறங்கும்..
எப்போது வீறிட்டு அழும்..
கலங்கிப் போனேன்..
என்னை நோக்கி
மெல்ல புன்னகைக்க ஆரம்பத்தது
நான் அழைக்க
என் மீது தாவி ஏறிக்கொண்டது
சதா கையிலேயே வைத்திருக்கச் சொல்லி
அடம் பிடித்தது
சிலர் சத்தம் அதிகம் என்றனர்
சிலர் மூக்கு சிறியது என்றனர்
பலமில்லை
வயிறு உப்பல் என்றனர்
சவலையாயினும் அது எனது
கை கால் உறுதி கொண்டு
முகம் தெளிந்தது
நானாகி
இங்கு இருக்கப் போவது..