உணவாவது..

Rice Nuts And Pulses In Earthen Pots High-Res Stock Photo - Getty Images

அம்மையின் உடல்

அத்தனின் தோள்

ஆசிரியனின் உயரம்

நண்பனின் நேரம்

துணையின் கனவு

முன்னோடியின் தனிமை

அத்தனையும்

உண்டு வாழும்

ஒட்டுண்ணிகளே நாம்..

உணவென்றால்

என்னவென்று நினைத்தோம்

மீண்டும்

உணவாவதன்றி

வேறென்ன செய்வோம்..