அவன்

எங்கும் இருண்டிருந்தது

சட்டென்று அவன் இருப்பை உணர்ந்தேன்

அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போல

‘யார் நீ’

சலனமற்றிருந்தான்

ஆவல் மிக

அவனை நோக்கிச் செல்ல முயன்றேன்

இருப்பை இழக்காதிருக்க

அவனையே அவதானித்திருந்தேன்

என்னுடையவை அனைத்தோடும்

அவனோடேயே இயைந்திருந்தேன்

சிறு வெளிச்சம் போதும்

பார்த்து விடுவேன்

ஒரு பெரும் மின்னல்

அவனைக் கண்டு விட்டேன்

ஆ..

அது நானே