வெம்மை

Photo by Matheus Viana on Pexels.com

உன் போர்வையும் என் போர்வையும்

அருகருகே தொட்டுக்கொண்டு கிடக்கின்றன

அவற்றுக்கு நம் கதை தெரியாது

அவையாவது அங்கனம் இருக்கட்டும்

தொடுதல் நன்று

தொடுதல் வாழ்த்து

அனைவர்க்கும்

அனைத்துக்கும்

தொட்டுக் கொள்ள

ஒரே ஒரு துளி வெம்மையாவது அமையட்டும்