நமது..

என்

மௌனத்தை

விழியசைவை

மூக்குச் சுளிப்பை

புன்னகையை

புன்னகையின்மையை

கன்னக் குழைவை கூட

புரிந்து கொள்ளாத உன்னை

என் வார்த்தைகள்

என்ன செய்து விட முடியும்

என் கண்ணீர் தான்

என்ன செய்து விட முடியும்

வார்த்தைகள் ஆபாசமானவை

தேவையற்றவை

கண்ணீர்

மேலும் ஆபாசமானது…

அது என்னுடைய தோல்வி

உன்னுடைய தோல்வியும் தான்

நம்முடைய தோல்வி

நம் இருவருக்கும் சொந்தமான ஒன்றே ஒன்று..