நாதன்

ஆழம்.. ஆழம்.. ஆழம்..

பட்டு இருட்டில்

வழுக்கி.. வழுக்கி.. வழுக்கி..

முடிவிலா ஆழத்தில் மெல்ல மூழ்குகிறேன்

கெஞ்சி கொஞ்சி மிழற்றி சிணுங்கி வருடி

அவள் என்னை மீட்டுகிறாள்

உடலெல்லாம் நாவாக அவள்

ஒக்கலில் அமர்ந்திருக்கிறேன்

ஆழம் செல்லச் செல்ல

அவள் ருத்ரன் ஆகிறான்

கார்வையில் முழுக்காட்டுகிறான்

அவன் அதிர்வலையில் நீந்துகிறேன்

உயிர் உலுக்கிப் போட கண்ணீர் சொரிகிறேன்

நாதக் கடலில்

ஒற்றைப் புள்ளியாகி

கரைந்தே அழிகிறேன்

அழிந்தே மீண்டும் முகிழ்க்கிறேன்