ஆடை

ஆடையின்றி இருந்தேன்

ஆடை அணியச் சொன்னாய்

அணிகள் பூணச் சொன்னாய்

உன் மீது இரக்கம் கொண்டேன்

அனைத்தையும் அணிந்து கொண்டேன்

நிறைந்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்கினாய்

பாவம் நீ

நீ விரும்பும் வரை ஆடை புனைந்திருப்பேன்

நிம்மதியாக இரு.