பொறுப்பு

அவளிடம் ஒர் அழகிய மலர் இருந்தது

கையில் வைக்காதே வாடி விடும் என்றாய்

தலையில் வைக்காதே வதங்கி விடும் என்றாய்

‘அது அவள் பூ

அவள் பார்த்துக் கொள்வாள்

உன் வேலையல்ல அது’ என்றேன்

‘எனக்கென்ன’ இடித்துக் கொண்டாய்

அவரவர் பொருள்

அவரவர் பொறுப்பு

எப்போது புரியும்