
மெத்தென்ற
வெள்ளைப் பூனை
பச்சைக் கண்கள் ஒளிர
பார்த்துக் கொண்டிருந்தது
சின்னக் குரலில்
மெல்ல ‘மியாவ்’ என்றது
ஒரு சின்ன வட்டிலில்
கொதிக்கும்
பாலைக் கொட்டினேன்
சிவந்த நாக்கை நீட்டி
வாயை நக்கிக் கொண்டது
சோம்பலாக அடியெடுத்து வைத்து
மெல்ல பாலிடம் வந்தது
சின்ன நாக்கை பாலில் நனைத்தது
துள்ளிக் குதித்து
கணத்தில் மறைந்தது
மாலை நேர மெல்லிய காற்றில்
சாய்ந்தமர்ந்து
சங்கீதம் கேட்கலானேன்.