
குழலூதிக் கொண்டிருந்தாய்
கண்கள் கிறங்க
சொக்கிப் போயிருந்தேன்
சின்னக் குரலில்
மெல்லப் பேசினேன்
இடியெனத் தாக்கி
என் குரல்வளையை நெறித்தாய்
இப்போது பேச்சென்ன
மூச்சு கூட இல்லை
கணமும் தயங்காதே
நெறித்த கையினால்
குழலெடுத்து வாசி
சங்கீதம் மிகவும் முக்கியம்.