
தலை முடி பிடித்திழுத்து எட்டி உதைத்து
கன்னத்தில் அறைந்து
ஆயிரம் வசவுகள் உரைத்த பின்
‘இன்னும் ஒரு அசைவும் காணவில்லையே’
என்று அயர்ந்து அமர்ந்த பின்
மெல்லிய கோடாக
அவள் கன்னங்களில் கண்ணீர்
பாம்பைக் கண்டு நாம் பயப்படுவது போல
பாம்பும் நம்மைக் கண்டு பயப்படும் தானே?