திரும்புதல்

‘சரக்,  சரக்..’ என்ற  செருப்பின் ஒலி

‘நான்  திரும்பி வந்து விட்டேன்’

’நிஜமாகவா?

அதற்குள்ளாகவா?’

’எப்படி இருக்கிறாய் நீ பார்ப்பதற்கு’

அவள் போர்வைக்குள் நுழைந்து கொண்டான்

நாசியில் அவன் மணம்

வாயில் எச்சில் ஊற

கண்களைத் திறந்தாள்

கண்களிலும் தான்