கசார்களின் அகராதி-மிலொரட் பாவிச்

’Dictionary of the Khazars’ என்ற இந்த புத்தகத்தின் பெண் பிரதியை நான் ஆங்கிலத்தில் வாசித்தேன். Milorad Pavic  என்ற ஸெர்பியர் எழுதிய புதினம் இது. ‘புதினம்’ என்ற சொல்லுக்கு முழு நியாயம் செய்திருக்கிறது இந்த நாவல்.   முற்றிலும் புதிய வடிவத்தைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். நாவலின் முக்கியமான பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.  எந்த மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறதோ அந்த மொழியின் அகர வரிசைக்கேற்ப இந்த வரிசை மாறட்டும் என்கிறார் ஆசிரியர். முற்றிலும் fluid-ஆன ஒரு structure-ஐக் கொண்டிருக்கிறது இந்த நாவல்.     மேலும் Red book, Green book, Yellow book என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல். ‘Khazar Polemic’ என்ற ஒரு மைய சம்பவத்தை கிறஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் யூதர்கள் அவரவருக்கு உகந்த வகையில் சித்தரிக்கிறார்கள். இது அடுத்த ‘level of fluidity’. இதுகாறும் வரலாறுகள் யாவும் இங்கனமே எழுதப்படுகின்றன அல்லவா?
      ஆசிரியர் காலங்காலமாக புத்தகம் எழுதுவதற்கான கற்பனைத்திறன் எழுதுபவருக்கான பொறுப்பாக இருக்கிறது, அது வாசிப்பவருக்குமாக மாற வேண்டும் என்பதால் இந்த புத்தகத்தை இங்கனம் எழுதியதாக கூறுகிறார்.
     கலைக்கப்பட்ட சீட்டுக் கட்டைப் போல   சிதறிக் கிடக்கும் சீட்டுகளை அடுக்கி அவரவருக்கான ரம்மியை சேர்ப்பது வாசகரின் கற்பனைத்திறனுக்கு விடப்பட்டுள்ளது. இந்த நாவல் ஒவ்வொரு வாசகருக்கும் புதிய வாசிப்பனுபவத்தை அளிக்க வல்லது.
     ஒரு சிற்பத்தையோ ஓவியத்தையோ பார்க்கும் போது அதை வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கலாம்.  சுற்றி வந்தும் பார்க்கலாம். முற்றிலும் non-linear வடிவங்கள் அவை. ஆனால் இசையும் இலக்கியமும் மட்டும் linear-ஆன வடிவங்கள். ஏன் அப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதிலாக இப்புதினத்தை படைத்திருக்கிறார் ஆசிரியர்.  இந்த புதினத்தை எங்கு தொடங்கியும் எப்படியும் வாசிக்கலாம். நானும் முதல் 75 பக்கங்களை நேராகவும் பின்னர் அடுத்த 75 பக்கங்களை பின்னாலிருந்தும் வாசித்தேன்.  உண்மையில் இந்த முறை novel-ஐ மேலும் assimilate செய்து கொள்ள எனக்கு உதவியது. 
     அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்தது இதன் மாயத்தன்மை.‘Here lies the readerWho will never open this bookHe is here forever dead’.என்ற வரிகளில் ஆரம்பிருக்கிறது இந்த நாவல். இந்நாவலை விடாமல் படித்து முடிக்க வைத்தது இந்த மாயத்தன்மை.
    புத்தகத்தின் முன்னுரையில் இந்த புத்தகத்தின் அனைத்து கைப்பிரதிகளும் இரண்டைத் தவிர அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.  அந்த இரண்டிலும் ஒன்று poisoned ivy ink-ல் எழுதப்பட்டதாகவும், அதை வாசிப்பவர் தொடர்ந்து 9 பக்கங்கள் வாசித்தால் , ஒன்பதாவது பக்கத்தின் ஒரு குறிப்பிட்ட வரியை வாசிக்கும் போது இறந்து விடுவார் என்பதும் மிகுந்த சுவாரஸ்யமான எச்சரிக்கையாக இருந்தது. இந்த நாவலின் மாயத்தன்மையை இந்த எச்சரிக்கை பல மடங்கு கூட்டி விடுகிறது. இந்தப் புத்தகத்தை இந்தக் குழுமத்தில் பரிந்துரைத்தவரைப் பார்த்து-என்னா ஒரு வில்லத்தனம் என்று கேட்க வேண்டும் போல் இருந்தது:)). நான் வாசித்தது pdf என்பதாலும், என் gadget-ல் என்பதாலும் மட்டுமே மேலும் வாசித்தேன்:)).
   இப்புதினத்தில் என்னை மேலும் கவர்ந்தது, வரிக்கு வரி கண்ணி வெடிகளை போல் ஒளிந்துள்ள கவிதைத் தன்மை.  பல வரிகளை என் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு சில வரிகள்.

1. Eye is the target of all objects.

2.  It is only an illusion that our thoughts are in our heads.  Our heads and we as a whole are in our thoughts. Thought is the sea- body is the current in the sea. Body makes room for itself in the world by forging through thoughts.

3. Silence was one hour’s walk long and two hours’ walk wide.

4. Humans have separated body from passion. For here below(in the dream) passion and the body are indistinguishable.

5. Meat of smart fish is harmful and tougher than that of stupid fish. Stupid eat both the stupid and the smart, whereas the smart pick and choose the stupid.

6. When two persons dream each other and one’s dream builds the other’s reality, a small part of the dream is always left over-these are ’children of the dream’

7. Dream is shorter than reality and is deeper than reality. So there is some left over that cannot completely fit into the reality of the person but spills into the reality of a third person.  The 3rdperson who thereby becomes a sort of hermaphrodite who leans towards one dreamer one moment and the other dreamer the next.   

என்ன ஒரு கற்பனை. இந்த கட்டற்ற கற்பனையே இந்நாவலின் தனித்தன்மை.  சில சமயங்களில் ஆசிரியர் delirious-ஆக இருக்கிறாரோ என்று எண்ணும் அளவுக்கு கட்டற்றதாக இருக்கிறது இந்த நாவல். ‘Creativity unleashed’ என்ற சொற்களே மனதில் சுற்றிக் கொண்டிருந்தன. பாவிச் இயல்பில் ஒரு கவிஞர் என்பதும் காரணமாக இருக்கலாம்.
   இந்த நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதியாகக் கிடைக்கிறது.வெறும் 7 வரிகள் மட்டுமே இரண்டிலும் வேறு வேறாக இருக்கின்றன. ஒரு jigsaw puzzle-ஐப் போல இரண்டையும் இணைத்து வாசித்தால் நாவல் திறந்து கொள்ளும் என்கிறார் ஆசிரியர்.
    ஆண் பிரதியில் Muawia தரும் அந்த pile of papers-ஐப் பார்க்கும் Dr. Scultz, Muawia-வின் விரல் நகங்களைப் பார்க்கிறார். Halevi யின் ‘மரம்’ என்ற குறியீட்டை நினைத்துக் கொள்கிறார். ஆம், இது இங்கனம் தான் இருக்க முடியும் என்று பரவசத்துடன் எங்கு கிடைத்தன இவை என்று Muawia-வைக் கேட்கிறார்.
     பெண் பிரதியில்- அவர்கள் இருவரின் விரல் நுனிகள் தொட்டுக் கொள்வதாகவும், தன் இறந்த காலமும் எதிர் காலமும் தொட்டுக் கொள்வதைப் போல் உணர்ந்ததாகவும், அந்த pile of papers-ஐப் படிக்கும் போது நூற்றாண்டுகளின் ஊடாக ஒரு பயணம் செய்ய ஆரம்பித்தவர் அல்ல பயணம் முடித்து வந்தவர் என்றும் கூறி Dr. Schultz, இவை எங்கு கிடைத்தன என்று கேட்டு மேற்கொண்டு உரையாடலைத் தொடர்வதாக வருகிறது.
    இவையிரண்டும் எப்படி ஒன்றோடொன்று பொருந்துகின்றன என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை :)).மனதிலேயே ஊறி ஊறி எப்போதாவது மின்னல் அடிக்கலாம்.சில முக்கிய புள்ளிகள்:1. Ateh, Kaghan, Khazar polemic, khazars பற்றி மூன்று புத்தகங்களிலும் தரப்பட்டுள்ளது.2. Polemic-ல் கலந்து கொண்டவர்கள்- Cyril, Sangari, Ibn Kora.3. அவர்களின் விவாதத்தைத் தொகுத்தவர்கள்- Methodius. Halevi, Al-Bakri.4. பதினேழாம் நூற்றாண்டில் அந்த அகராதியைப் பின்தொடர்ந்தவர்கள் Brankovich, Cohen, Masudi5. 20-ம் நூற்றாண்டில் இவர்களின் மறுபிறப்பாக வந்து அகராதியை பின் தொடர்ந்தவர்கள் Suk, Schultz, Muawia.6. சாத்தான்களாக இந்த தொகுப்பு உருவாவதைத் தடுப்பவர்கள்-Sevast, Ephrosinia Lukarevich, Akshany.இந்தப் புள்ளிகள் நாவலைத் தொகுத்துக் கொள்வதில் உதவலாம். இவர்களின் வாழ்வும், இறப்பும் ஒன்றே போல் இருப்பதும், காலத்தால் பின்னால் கேட்கக் கூடிய சொற்றொடர்கள் முன்னாலேயே கேட்பதும், முன்னாட்களிலிருந்து கையளிக்கப்பட்ட சொற்றொடர்கள் புது வெளிச்சத்தைத் தருவதமாக வினோதமான நிகழ்வுகள் இவர்களை நூற்றாண்டுகளின் ஊடாக இணைக்கின்றன.   Non-linear-ஆன ஒரு படைப்பை linear-ஆக்கி புரிந்து கொள்வதிலேயே நம் மனம் கவனம் செலுத்துகிறது என்பதை ஒரு புன்னகையோடு அறிகிறேன்.   Dr. Scultz தன் இளமை உருவுக்கு எழுதும் கடிதங்கள் கவித்துவத்தின் உச்சம்.   Ateh மீண்டும் மீண்டும் தன் காதலனான Mukaddasa Al  Safer-க்கு தன் அறையின் சாவியை அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.   Suk, October 2 1982-ல் expire ஆகும் முட்டையை October 8 1982-ல் தன்னைக் காப்பாற்ற அழைக்கிறார்.   இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக சந்திரசேகரன் சாரின் கேள்விகளுக்கான என் பதில்கள்:1.முஸ்தாக்கின் காலம் 17ஆம் நூற்றாண்டு தான். அச்சுப் பிழை என்று தான் நினைக்கிறேன். ஆனால் ஆங்கில வடிவத்திலும் அதே பிழையைச் செய்வார்களா என்ன?2. “Our false victim saved our lives” என்பதே அந்த வரி. Suk-ஐ கொன்றதாக alibi கொடுத்ததினால் தான் Dr.Schultz, premeditated murder என்னும் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கிறார். அதனால் வெறும் 6 ஆண்டுகள் தான் அவர் தண்டனைக் காலம். அவர் வெகு நாட்களாகவே Muawia-வைக் கொல்வதாக உறுதி பூண்டிருக்கிறார். துப்பாக்கியையும் அதற்காகவே கொண்டு வந்தார்.  ஆனால் தவறுதலாக ஸுக்கை அவர் கொன்றார் என்று ஒப்புக் கொள்கிறார். அதுவே அவ்வரியின் பொருள் என்று எண்ணுகிறேன்.Engrossing novel.