அழகிய மரம்-தரம் பால்

காந்தியடிகள் ‘சத்தம் ஹவுஸ்’ உரையில், பாரம்பரிய இந்தியக் கல்வி முறையை ஒரு ‘அழகிய மரமாக’ உருவகிக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் அம்மரத்தின் வேர்களை எடுத்து ஆராய்ந்து விட்டு அங்கனமே அதை வாட விட்டு விட்டதாகக் குற்றம் சாட்டுகிறார். அதனால் சீண்டப்பட்ட ஹார்டாக் என்ற பிரிட்டிஷ் கல்வியாளர் காந்தியை விவாதத்துக்கு அழைக்கிறார். காந்தி அளிக்கும் ஆதாரங்கள் அவரைப் பெரிதாக திருப்திபடுத்துவதில்லை. அதனால் காந்தியின் உருவகத்தை மறுக்கும் விதமாக மூன்று லெக்சர்களை அளித்து விட்டு அவற்றைப் புத்தகமாக தொகுத்து விடுகிறார் ஹார்டாக்.

பின்னர் காந்தி இறந்த 20 ஆண்டுகள் கழித்து, சில புள்ளி விவரங்கள் காந்தியவாதியான திரு. தரம்பால் அவர்களின் கவனத்தைப் பெறுகின்றன. அவை, மதராஸ் மாகாணத்தில் ஸர் தாமஸ் மன்ரோ அவர்களால், 1820-களில் அப்போதைய கலெக்டர்களின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள். இத்தகவல்கள் அக்காலத்தைய இந்தியக் கல்வி முறை மற்றும் சமூகக் கட்டமைப்பின் மீது பாய்ச்சும் வெளிச்சம், காந்தியடிகளின் உருவகத்தை பலப் படுத்துவதால் அவற்றைத் தொகுத்து புத்தக வடிவில் அளித்திருக்கிறார் தரம்பால். காந்தியின் ஒரு உவமையால் உந்தப்பட்டு, அதை நிரூபிக்கும் முகமாக மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு, அனைத்துத் தரவுகளையும் தொகுத்திருக்கிறார்.

இப்புத்தகத்தில், இரண்டு விஷயங்கள் மிக முக்கியமானவையாக எனக்குத் தோன்றுகின்றன. அவை,

1. 1820-களில் இருந்த இந்திய சமுதாயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம், மற்றும் பாரம்பரியக் கல்வி முறை ஆகியவை.

2. கடிதங்களின் மூலம் வெளிப்படும் காந்தியின் உள்ளம் செயல்பட்ட விதத்தின் ஒரு மிடறு.

இக்கல்வி முறையின் எச்சங்களாக நம்மிடம் இப்போதும் உள்ள பழக்கங்கள், சடங்குகள் பற்றிய ஒரு சிறு அலசலும் செய்ய விழைகிறேன்.

1820-களில் இந்தியச் சமுதாயம் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்த போதும், அடிப்படைக் கல்வியான எண்ணும் எழுத்தும் அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு மேற்பட்ட கல்வி, அவரவர் தொழில் சார்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கற்க ஆர்வமுள்ளவர்கள், ’ஜிஞ்ஞாஸா’ என்ற ஞானத் தேடல் உள்ளவர்கள், ஆசிரியர்களைத் தேடிச் சென்று கற்றிருக்கிறார்கள். ஊ.வே.சா அவர்கள் செய்ததைப் போல, ஒவ்வொரு ஆசிரியரிடமாகச் சென்று மாணவர்கள் தனக்கான பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் சாதியோ ஆசிரியர்களின் சாதியோ இம்முறையில் முக்கியமனதாக இருக்கவில்லை.

திண்ணைப் பள்ளிக்கூடங்களில். ஆசிரியர்கள் பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான கட்டணமே பெற்றுக் கொண்டதும், ஏழை மாணவர்கள் தங்களால் இயன்றதை மட்டுமே அளித்ததும், பணம் படைத்தவர்கள் அதை ஈடு செய்யும் விதமாக அதிகமாக அளித்ததும், ஆசிரியர்தம் தேவைகளுக்கு ஊர் பொதுவில் நிலம் மானியமாக வழங்கப்பட்டதும் என ethically உன்னதமான ஒரு சமூகக் கட்டுமானம் இருந்ததைக் காண்கிறோம். எந்த மாணவனுக்கும் அவனின் பொருளாதார நிலைமையைக் காரணம் காட்டி கல்வி மறுக்கப்படவில்லை.

குருகுலங்களில் ஆசிரியரே தன் கூரைக்குக் கீழ் மாணவர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறார்.  ஆசிரியரால் அவர்களை sustain செய்ய முடியாத நிலைமைகளில், ஊருக்குள் சென்று மாணவர்கள் இரந்து பெற்றுக் கொண்டு வருவதும், அவர்களுக்கு உவந்து பொருள் அளிப்பதும் என எந்த ஒரு இளக்காரத்திற்கும் உட்படாத சமன்பாடு இருந்திருக்கிறது. இன்றும், உபநயனத்தின் போது, வடு ‘பவதீ பிக்‌ஷாம் தேஹி’ என்று இரக்க பயிற்றுவிக்கப்படுகிறான். ‘உஞ்ச வ்ருத்தீ’ என்ற சடங்கில் தெருவில் பாடிக் கொண்டே செல்லும் பாகவதரை நமஸ்கரித்து அவர் தம் பாத்திரத்தில் அரிசியிடுவதும், அவர் சில அரிமணிகளை பிரசாதமாக அளிப்பதும் அப்பிரசாதத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீடு செழிப்பாக இருக்கும் என்று நம்புவதும் இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சி தான்.

கற்றலின் மீதும் , கல்வியை கடைக்கோடி வரை கொண்டு சேர்ப்பதின் மீதும் மிகப்பெரிய ஈடுபாடு கொண்ட சமூகமாக இருந்திருக்கிறது நம் இந்தியச் சமூகம். இன்றும் நம் நாட்டில் பாரம்பரியக் கலைகளான இசைக்கல்வியும், நடனமும் இங்கனமே கற்றுத் தரப்படுகின்றன. திறமையான ஆசிரியர்கள் சில மாணவர்களைக் கொண்டு வகுப்புகளைத் தொடங்குகிறார்கள். மாணவர்களின் பெற்றோரே கல்விக்கானக் கட்டணத்தை அளிக்கிறார்கள். திறமையான மாணவர்கள் என்றால் கட்டணம் பெரிதாகக் கொள்ளப்படுவதில்லை. குறிப்பிட்ட பாடத்திட்டம் என்ற ஒன்று இல்லை. மாணவர்களின் திறமையே அவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்துகின்றது. மேலும் எதைச் சொல்லி தருவது என்பதை ஆசிரியரே மாணவரின் திறமையை வைத்து கணக்கிட்டு சொல்லித் தருகிறார். தன்னை மீறும் மாணவர்களைத் தானே தன்னை விட சிறந்த ஆசிரியர்களிடம் அனுப்பி வைக்கிறார். நம் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பிரபலப் பாடகரான  செம்மங்குடி ஸ்ரீநிவாஸ அய்யர், தன் மாணவர்களிடமிருந்து எந்தக் கட்டணத்தையும் பெற்றுக் கொண்டதில்லையாம். நிறையப் பாடகர்கள் இங்கனம் இலவசமாக இசைக் கல்வி அளித்ததாகத் தெரிகிறது.

கல்வியைப் பொறுத்த வரை, 1850-களில், ஆங்கிலேயர்கள் இத்தகைய ஊர்களிலிருந்த உபரியை வரிகளின் மூலம் உறிஞ்சி எடுத்த போது, இவ்வமைப்புகள் வலுவிழக்க ஆரம்பித்திருக்கின்றன. கற்றலையே தொழிலாகக் கொண்ட பிராமணர்களும், கற்றலின் மீது பெரும் ஆர்வம் கொண்ட மற்றவர்களும் ஆங்கிலேயர் திறந்த பள்ளிகளில் சேர்ந்து பயன் பெறுகின்றனர். இப்பள்ளிகள், குறைந்த இடங்களைக் கொண்டிருந்ததாலும், தூரத்தில் இருந்ததாலும், வரிகட்ட வேண்டியிருந்ததால் அடிப்படைத் தேவைகளுக்கே போராட வேண்டியிருந்த சமூகத்தவர்கள், இப்புதிய கல்வித் திட்டத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இங்கனம் 2-3 தலைமுறைக்காலம் கல்வியிழந்தவர்கள், நிரந்தரமாக கல்வி வாசனையற்றவர்களாக மாறிப்போயிருக்கிறார்கள்.

இதைத் தன் உள்ளொளியால் உணர்ந்த காந்தியடிகள், முன்னர் சொன்ன பிரபல உருவகத்தை தன் உறையில் சொல்கிறார். டாக்கா யுனிவெர்சிடியின் சான்ஸலராக இருந்த ஹார்டாக் இதை வன்மையாக மறுக்கிறார். பெரும்பாலான ஆங்கிலேயர்கள் தங்கள் கல்வித்திட்டம் குறை கொண்டது என்பதை நம்ப மறுக்கின்றனர். காந்தியடிகளுக்கும் இவருக்கும் நடந்த கடிதப் பரிமாற்றம் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றது.

குறிப்பாக, காந்தி ஹார்டாக்கிடம்-’நீங்களும் சத்தியத்தை நோக்கி பயணிக்கிறீர்கள் என்பதாலேயே நான் உங்களுக்கு பதில் எழுதுகிறேன். நான் நீங்கள் ஒப்புக் கொள்ளும் தரவுகளை அளிக்க முயல்கிறேன். நான் சொல்வது தவறு என்று நிரூபிப்பீர்களானால், என் வாக்கியத்தை அனைவரும் அறியும் வண்ணம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறுகிறார்.

இந்தக் கடிதப் பரிமாற்றங்களில், காந்தி ஒரு முறைக் கூட தன் வார்த்தைகளிலிருந்து ஓடி ஒளியவில்லை. ஒரு முறைக் கூட சந்திப்பதை தவிர்க்க வில்லை. ‘வாருங்கள், நாம் இருவரும் சேர்ந்து சத்தியத்தைத் தேடுவோம்’ என்ற காந்தியின் கூற்று என்னை மிகுந்த உளயெழுச்சிக்கு ஆளாக்கியது. என் கணவரோடு இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது இது நேராக உபநிஷத் வாக்கியம் என்றார். காந்தி சத்தியத்தையே உடும்புப் பிடியாக பிடித்திருக்கிறார். அக்கிழவனின் கையில் உள்ள கோல் சத்தியத்தின் புறவடிவமே போலும்.

கடைசியாக, இப்புத்தகத்தில் உள்ள தரவுகள் மூலம், காந்தியடிகள் சொன்னது போல ‘to the shame of men’, பாரம்பரியமான கல்வி பெண்கள் விஷயத்தில் almost இல்லை என்பது தெரிய வருகிறது. இந்திய மன அமைப்பின் மீது உள்ள மிகப் பெரிய கறை இது.  பெண்கள் மற்றும் பஞ்சமர்கள் மீது இந்தியக் கூட்டு மனம் செய்த, செய்து கொண்டிருக்கிற சுரண்டல், அம்மனம் அடைந்த அனைத்து உச்சங்களையும் nullify செய்து விடுகிறது என்பது என் துணிபு. பெண்களுக்கும் கல்வி என்பது ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய கல்வித்திட்டத்தின் மூலமாகவே தொடங்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

காந்தியடிகள் பெண்கள் கல்வி இந்தியாவில் neglect செய்யப் பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது 1931-ல்- ஹார்டாக் அவர்களின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் போது. 1931-ல் இங்கிலாந்தில் பெண்களின் நிலைப் பற்றி சில தகவல்கள்-

1. இங்கிலாந்தில் 1840-ல் , 60% பெண்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்,  ஆனால் 1860-ல் , 40% மட்டுமே எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

2. 1830-லேயே Mechanics’ Institute in London பெண்களுக்கும் திறந்து விடப் பட்டுவிட்டது.

3.1880 Education Act மூலம் 5 முதல் 10 வயதுக் குழந்தைகள் (பெண் குழந்தைகள் உட்பட) அனைவருக்கும் அரசாங்க நிதி உதவியில் கட்டாயக் கல்வி வழங்க உத்தரவு இடப்பட்டது.

4. 1878-ல் பெண்களுக்கு முதல் டிகிரி University of London-ல் வழங்கியாகிவிட்டது

5. 1918-ல் right to vote வழங்கியாகி விட்டது.

6. 1928-ல் right to vote on equal terms with men வழங்கியாகி விட்டது.

1931-ல் காந்தியடிகள் தன் உரையில், 50 வருடங்களுக்கு முன் இருந்ததைப் போல அப்போதைய கல்வி இல்லை என்று ஆங்கிலேயர்களைக் குற்றம் சாட்டுகிறார். ஹார்டாக் அதை மறுக்கிறார். அவர்கள் இருவரும் 1870-களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்போதைய இங்கிலாந்தில் 1860-லேயே 60% மகளிர் படிப்பறிவு பெற்று விட்டனர். அதனால் ஹார்டொக்-க்கு அத்தனை உரிமையும் இருக்கிறது இந்தியாவில் ஏன் பெண்களின் கல்வி வெறும் 2% மாத்திரமே இருந்தது என்ற கேள்வி எழுப்ப. அவர்கள் late-ஆக ஆரம்பித்தாலும் மிக சீக்கிரமாக progress செய்து விட்டனர்.

நம்முடைய வேத காலத்தில் லோபாமுத்ரா, கோஷா, கார்கி, மைத்ரேயி ஆகிய பெண் ரிஷிகளும், சங்க காலத்தில் சுமார் 154 பெண் கவிஞர்களும் இருந்திருக்கின்றனர். வரலாறு எப்போதுமே முன்னோக்கியே ஒழுகுவதில்லை. இரண்டு அடி ஏறினால் முழம் சறுக்கத் தான் செய்கிறது. அதனால் எப்பொழுதோ எதனாலோ சறுக்கிய பெண்களின் graph இன்னும் நிமிர்ந்த பாடில்லை. ஆங்கிலேயர்கள் தான் அனைத்து நல்லதையும் கொண்டு வந்தார்கள் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர்கள் திறந்த பள்ளிகள் மிகவும் முக்கியமானவை. ஆங்கிலேயர்களும் மாத விலக்கின் போது பெண்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்று வைத்திருந்தால், கண்டிப்பாக இத்தனை progress வந்திருக்காது.

ஆங்கிலேயர்கள் வராமல் இருந்திருந்தால் இன்னும் சீக்கிரமே அனைத்து முன்னேற்றங்களும் நடந்திருக்கும் என்பது, economical realm—ல் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்(வரி கொடுத்தே அழிந்திருக்க மாட்டோம்). ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி இல்லை. இன்னமும் பெண்களைப் பற்றிய அந்த taboo இருந்திருக்கும்.

இந்நாட்களில் கூட பாரம்பரிய குருகுல கல்வி பெற்ற வேத வித்துகள், மீபொருண்மை சார்ந்த விஷயங்களை அநாயாசமாக quote செய்யக் கூடியவர்கள் கூட, பெண்களின் விலக்கு சமயங்களை தோஷம் என்று தான் கூறுகின்றனர்(நானே கூட விலக்கு என்று தான் அழைக்கிறேன் J). சங்கரர் போல ராமானுஜர் போல ஒரு reformist-ஆல் தான் நம் மனங்களில் உள்ள இந்த conditioning-ஐ மாற்ற முடியும். பள்ளியையாவது accessible-ஆகச் செய்ததால் தான் இவ்வளவு முன்னேற்றமாவது கிடைத்துள்ளது.